அமலனாதிபிரான் – கொண்டல்

பாசுரம் – 6

கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணை

உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக்

கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே.

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

வெண்ணைஉண்டவாயன் – களவு கண்டு ஒளித்து வந்து கிடக்கிறவன். பெரிய பெருமாள் கொறுட்டைமோந்து பார்த்தால் இப்போதும்  வெண்ணெய் நாறாநிற்கும்.

அணியரங்கன் என்னமுதினை –  தேவர்களுடைய உப்புச்சாறு போலன்று இவருடைய அம்ருதம்

butter

 

 

Advertisements

அமலனாதிபிரான் – ஆலமாமரத்தின்

பாசுரம் – 5

ஆலமாமரத்தினிலை மேல் ஒருபாலகனாய்

ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்

கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்

நீலமேனி ஐயோ ! நிறைகொண்டது என் நெஞ்சினையே.

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

அரவின் அணையான் –  ப்ரளயத்தில் தன் வயிற்றிலே புகாவிடில் ஜகத்து ஜீவியதாப்போலே, ஸம்ஸாரிகள் தன் முகத்தே விழியாவிடில் தனக்குச் செல்லாதனபடி.

முடிவில்லதோரெழில் நீலமேனி –  அவதி காண வொண்ணாத அழகை உடைய நெய்த்த திருமேனி.

ஐயோ – பச்சைசட்டையிட்டுத் தனக்குள்ளத்தையடையக் காட்டி எனக்குள்ளத்தையடையக் கொண்டான்

index

 

அமலனாதிபிரான் – பாரமாய

thiruthanka-vilakoli-perumalபாசுரம் -4

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்

வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்

கோரமாதவம் செய்தனன்கொல் அறியேன் அரங்கதம்மான்

திருவாரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே.

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

திருவாரமார்பதன்றோ – பெரியபிராட்டியாரையும் ஹாரத்தையுமுடையத்தான மார்வன்றோ. தமக்குப் பற்றாசாகத் தாய் நிழலிலே ஒதுங்குகிறார்.  இவனைக் குறித்து ” தேன மைத்ரீ பவது”  என்றும்,  அவனைக் குறித்து ” ந கஸ்சின்நாபரத்யாதி ” என்றும் சிறையிலேயிருந்தே  சேரவிடப்பார்கிறவள், மார்பிலே இருந்தால் சேரவிடச் சொல்ல வேணுமோ ? அழகிய மார்விலாரம். ஆரத்துக்கு அழகு கொடுக்கவற்றா இருக்கை . ஆரம் அழகை மறைக்கைக்கு உடலாமித்தனை யிரே. “ஸர்வ பூஷன பூஷார்ஹா : ” என்னுமாப்போலே.

ஆள்கொண்டதே –  இழந்த சேஷத்வத்தைத் தந்தது

 

 

 

அமலனாதிபிரான் – உவந்த

பாசுரம் – 3

உவந்தஉள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற

நிவர்ந்தநீண்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்

கவர்ந்த வெங்கணைக்காகுத்தன் கடியார் பொழிலரங்கத்தம்மான் அரைச்

சிவந்த ஆடையின் மேல்சென்றதாம் என சிந்தனையே.

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

உவந்தஉள்ளத்தனாய் –  ஆழ்வாரை அகப்படுத்துகயால் வந்த ப்ரீதி.  ஸர்வேஸ்வரனாய்  ஸ்ரிய : பதியாய்  அவாப்தஸமஸ்தகாமனாய் இருக்கிறவன் அர்தியாய் வந்து, தன் திருவடிகளைத் தலையிலே வையா நின்றால் ” மதீய மூர்த்தானம்  அலங்கரிஷ்யதி ” என்று உகக்க வேண்டியிருக்க , அவையறியாதொழிய, பிரஜை பால்குடிக்கக்கண்டு உகக்கும் மாதாவைப்போலே உகந்த திருஉள்ளத்தை  உடையவனாய்.

இவற்றைப் பிரிந்தால் வ்யஸனமும் தன்னதேயிரே ; “வ்யஸநேஷு  மனுஷ்யாணாம் ப்ருஸம்ப வதி ” என்கிறபடியே.

அரங்கதம்மான் – அவதாரத்துக்குப் பிற்பாடார்க்கும் இழவு தீரக் கோயிலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறபடி .

அம்மான் – இங்கே வந்த பின்பு ஈஸ்வரத்வம் நிலைநிற்கை.

trivikrama-kovilur

திருமாலை – இனிதிரைத் திவலை

cropped-vimanam.jpg

பாசுரம் -2

இனிதிரைத் திவலை மோத வெறியுந்தண் பரவை மீதே

தனிகிடந் தரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்

கனியிருந் தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்

பனியரும் புதிரு மாலோ என்செய்கேன் பாவி யேனே.

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

கண்ட கண்கள் –  அநாதி காலம் இழந்த இழவு தீரக் காணப்பெற்ற  கண்கள்.

என் செய்கேன் பாவியேனே – கண்ணநீர் அருவிகள் போலே மறைக்கையாலே ,”என் செய்கேன் ?”  என்கிறார் . “பெறுதற்கரிய விஷயத்தைக்கண்டு அனுபவிக்கப் பெற்றிருக்க , இதுக்கு இடைக்கலருண்டாவதே !  என் செய்கேன் பாவியேன் ?” என்கிறார்.

 

 

 

 

திருமாலை -பச்சை மாமலை

பாசுரம் – 1

பச்சை மாமலை போல் மேனிப் பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா! அமர ரேறே ! ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்  இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே .

ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் :

பச்சை மாமலை போல் மேனி 

பச்சைநிறத்தையுடைத்தாய் , ஸ்லாக்யமாயிருப்பதொரு, மலைபோலேயாயித்துத் திருமேனி இருப்பது.

காணப்புக்கால்,கண்ணும் குளிர்ந்து நெஞ்சும் குளிரும்படி ஸ்லாக்யமாயாய்த்திருப்பது.

தாபத்ரயாதுரருடைய ஸகலதாபங்களும் , கண்டபோதே ஆறும்படியாய்த்துத்

திருமேனி இருப்பது.

அறிமுகம்

திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு சுவாமி பெரியவாச்சான் பிள்ளையின்  வியாக்யானம் ஒருகடல்.  அதில் சில துளிகள் மட்டுமே இங்கு. சுவாமியின் அருளால் என்றேனும் ஒரு நாள் நமக்கு அந்த கடலின் கரை அருகில் செல்லும் பாக்கியம் கிட்டட்டும்.

சுவாமியின் வியாக்யானம் அப்படியே தரப்படுகின்றன. அடியேனின் விளக்கங்கள் ஏதும் இல்லை.